Return   Facebook

The Universal House of Justice

Ridván 2019

To the Bahá’ís of the World

Dearly loved Friends,

அதிபெரும் திருவிழா நெருங்கிவரும் வேளை, நன்றியும் எதிர்ப்பார்ப்பும் ─அற்புதங்களைச் சாதிப்பதற்குத் தமது நம்பிக்கையாளர்களுக்கு பஹாவுல்லா வழங்கியுள்ள உதவிக்காக நன்றியும், உடனடி எதிர்காலம் கொண்டுள்ளவற்றிற்கான எதிர்பார்ப்பும் - மிகுந்த உணர்வுகளால் நாங்கள் பரவசம் அடைந்துள்ளோம்.

உலகளாவிய நிலையில் பஹாவுல்லா பிறப்பின் இருநூறாம் நினைவாண்டுக் கொண்டாட்டங்களால் உருவாக்கப்பட்ட உந்துவேகம், வளர்ந்தே வருகின்றது. தீவிரப்படுத்தப்பட்டுள்ள பஹாய் சமூகத்தின் மேம்பாடு, அதன் வளர்ந்து வரும் திறனாற்றல், அதன் உறுப்பினர்களிலிருந்து மென்மேலும் அதிக ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான அதன் திறன் ஆகியவை அச்சமூகத்தின் சமீபமான உலகளாவிய சாதனைகளின் சுருக்க விவரங்களிலிருந்து மிகத்தெளிவாக வெளிப்படுகின்றது. இவற்றுள், சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, தனிச்சிறப்புடன் காணப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளை முறைமையோடு சீர்படுத்தி, பன்மடங்காக்கிட பஹாய் உலகின் இருபது ஆண்டுகால முயற்சியைத் தொடர்ந்து நடப்பிலுள்ள ஐந்து ஆண்டு திட்டம் வந்துள்ளது - குறிப்பிடத்தக்க வகையில், திட்டத்தின் முதல் இரண்டரை ஆண்டுகளில், மைய நடவடிக்கைகளின் எண்ணிக்கை மட்டுமே பாதிக்கு மேல் உயர்ந்துள்ளது. எந்த ஒரு நேரத்திலும், பத்து இலட்சத்துக்கும் கூடுதலான மக்களை இதுபோன்ற நடவடிக்கைக்களில் ஈடுபடுத்தி, அவர்கள் ஆன்மீக மெய்ம்மைகளை ஆராய உதவுவதற்கான ஆற்றலைக் கொண்டிருப்பதை உலகளாவிய சமூகம் வெளிப்படுத்தியுள்ளது. அதே குறுகிய காலகட்டத்தில்--நம்பிக்கைக்கும் அருட்கொடைக்குமான மூலாதாரத்திலிருந்து அதிகரித்து வரும் மானிடத்தின் பிரிவினைக்கு எதிரான மிகவும் தேவைப்படும்--வழிபாட்டுக்கான ஒன்றுகூடல்கள் இரட்டிப்பாகின. இந்த மேம்பாடு விசேஷ வாக்குறுதியைக் கொண்டிருக்கிறது, ஏனெனில், வழிபாட்டுக் கூட்டங்கள் சமூகத்தின் வாழ்வில் ஒரு புதிய ஆற்றலைப் புகட்டுகின்றன. எல்லா வயதினருக்குமான கல்விசார்ந்த முயற்சிகளோடு ஒன்றாகப் பின்னப்பட்ட இந்த வழிபாட்டுக் கூட்டங்கள்: தங்களின் இறைவழிபாட்டிலும் மனிதகுலத்திற்கான தங்களின் சேவையிலும் சமூகங்களைத் தனிசிறப்பித்துக்காட்டும் மேன்மையான நோக்கத்தை வலுப்படுத்துகின்றன. பஹாய் நடவடிக்கைகளில் பெரிய எண்ணிக்கையிலானோரின் பங்கேற்பு தொடர்ந்து தக்கவைக்கப்பட்டு, நண்பர்கள் தங்கள் சமூக மேம்பாட்டில் மூன்றாவது மைல்கல்லைக் கடந்துள்ள கிலஸ்டர்களைத் தவிர்த்து வேறு எங்கும் இது மிகவும் வெளிப்படையாகக் காணப்படவில்லை. திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து, இந்த அளவிற்கு இச்செயல்முறை தீவிரமடைந்துள்ள கிலஸ்டர்களின் எண்ணிக்கை இருமடங்கிற்கும் கூடுதலாகி, இப்பொழுது அந்த எண்ணிக்கை ஏறத்தாழ ஐந்நூறு ஆகியுள்ளதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

நடப்பிலிருக்கும் தன்மைமாற்றத்தின் அளவைப் பார்க்கும்போது, இந்தச் சுருக்கமான கருத்துக்கணிப்பால் நீதி செய்ய முடியாது. திட்டத்தில் மீதமிருக்கும் இரண்டு வருடங்களுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. நாம் எதிர்ப்பார்த்தபடி, அறிவு மற்றும் வளஆதார களஞ்சியங்களாக ஆகியுள்ள கிலஸ்டர்களின் மிகவும் வலுவான வளர்ச்சித் திட்டங்களிலிருந்து கற்கப்பட்ட பாடங்களை விசாலமாக பரப்பியதன் மூலம் அதிகம் சாதிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக போதனை மையமும், ஆலோசகர்களும், அவர்களின் அயரா துணை வாரிய உறுப்பினர்களும் கற்றலின் இந்தத் தீவிரமடைதலின் மூலம் உலகின் எல்லா பாகங்களிலுமுள்ள நண்பர்கள் பயனடையவும், பெறப்பட்டுள்ள நுண்ணறிவுகளைத் தங்களின் சொந்த மெய்நிலைகளுக்குப் பயன்படுத்துவதை உறுதிசெய்வதற்கும் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளத் தயங்கியதே இல்லை. அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான கிலஸ்டர்களிலும் அவற்றில் அடங்கியுள்ள அண்டைப்புறங்களிலும் அவற்றினுள் இருக்கும் கிராமங்களிலும் தங்களின் சுற்றுப்புறங்களை மேம்படுத்த உதவும் வளர்ச்சிக்கான செயல்முறைக்கு, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் என்ன தேவைப்படுகின்றது என்பதைத் தங்களின் நடவடிக்கைகள் மற்றும் பிரதிபலிப்புகள் மூலம் கண்டறியும் நண்பர்களின் மையக்கரு ஒன்று உருவாகியிருப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்வடைகின்றோம். எதன் மூலம் சமூகத்தின் ஆன்மீக மற்றும் லௌகீக செழுமைக்குப் பங்களிக்கும் திறனாற்றல் மேம்பாடு காண்கின்றதோ அந்தப் பயிற்சிக்கழகமெனும் ஆற்றல்வாய்ந்த கருவியை அவர்கள் பயன்படுத்துகின்றனர்; அவர்கள் அவ்வாறு செயல்படும்போது அவர்களுடன் சேர்ந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. வளர்ச்சியின் பண்புக்கூறுகள் போன்றே, இயல்பாகவே, சூழ்நிலைகளும் இடத்திற்கு இடம் வேறுபடும். ஆனால், கைவசமுள்ள பணிக்கு மென்மேலும் விளைவுத்திறம் மிக்க பங்களிப்பை முறைமையான முயற்சிகளின் மூலம் ஒவ்வொருவரும் செய்திட முடியும். ஒவ்வொரு சூழலிலும், விரைவாகவோ படிப்படியாகவோ ஆன்மீக ஈர்ப்பினை ஏற்படுத்தும் அர்த்தமுள்ள மற்றும் உற்சாகமூட்டும் உரையாடல்களில் பிற ஆன்மாக்களை ஈடுபடுத்துவதில் தூய்மையான மகிழ்ச்சியுள்ளது. நம்பிக்கையாளரில் தூண்டப்பட்டுள்ள தீ எந்த அளவுக்கு அதிக பிரகாசமாக இருக்கின்றதோ, அதன் வெப்பத்திற்கு ஆளாக்கப்படுவோர் உணரும் ஈர்ப்பாற்றலும் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கும். பஹாவுல்லாவின் அன்பினால் எரிந்துகொண்டிருக்கும் ஓர் இதயமானது சகோதர ஆன்மாக்களைத் தேடி, அவர்கள் ஒரு சேவைப் பாதையில் பிரவேசிக்கும் போது அவர்களை ஊக்குவித்து, அவர்கள் அனுபவம் பெறும் போது அவர்களோடு உடன்செல்வதைத் தவிர வேறு எந்தப் பொருத்தமான காரியத்தைத்தான் கற்பனை செய்திட இயலும். அத்துடன் அந்த ஆன்மாக்கள் தங்களின் நம்பிக்கையில் உறுதியடைந்து, சுதந்திரமாக முன்னெழுந்து, அதே பயணத்தில் பிறருக்கும் தோள்கொடுப்பதைக் காண்பதைவிட வேறென்னதான்--அனைத்தையும் விட மகிழ்ச்சியளிப்பதாக--இருந்திட முடியும். இந்த நிலையற்ற வாழ்க்கையில் வழங்கப்படும் தருணங்கள் அனைத்திலும் இவையே மிகவும் போற்றப்படவேண்டிய தருணங்களாகும்.

பாப் பெருமானார் பிறப்பின் இருநூறாம் நினைவாண்டு நெருங்கிவிட்டதால், இந்த ஆன்மீகப் பெருமுயற்சியைத் தீவிரப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மேலும் பரபரப்பாகின்றன. அதற்கு முந்திய இருநூறாம் நினைவாண்டைப் போன்று, இந்த நினைவாண்டும் கணக்கிடப்படவியலா மதிப்புடையதாகும். அடுத்தடுத்து வந்த, உலகின் தொடுவானத்தைப் பிரகாசிக்கச் செய்த, பேரொளிகளான தெய்வீகத் திருவுருவின் இரண்டு அவதாரங்களின் தோற்றத்தினால் சமிக்கைகாட்டப்பட்ட(signalled) பெருக்கெடுத்தோடும் அசாதாரண தெய்வீகத் திருவருளினால், அது பஹாய்கள் அனைவருக்கும் இறைவனின் மகத்தான நாள் குறித்துத் தங்களைச் சுற்றியுள்ளோரை விழிப்பூட்டுவதற்கு அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றது. இரண்டு வருடங்களுக்கு முன் அடையப்பட்ட அனுபவங்களிலிருந்து, வரக்கூடிய இரண்டு சுழல்வட்டங்களிலும் வாய்க்கக் கூடியவற்றின் அளவு அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அப்போது கற்கப்பட்ட அனைத்தும் இவ்வருட இரட்டைப் புனித பிறந்தநாள்களுக்கான திட்டங்களில் பயன்படுத்தப்பட வேண்டும். இருநூறாம் நினைவாண்டு விழா நெருங்கி வருகையில், பாப் பெருமானாருக்குப் பொருத்தமான முறையில் மரியாதை செய்வதற்கான உங்கள் முயற்சிகள் அனைத்தும், அவர் முன்னறிவித்த சமயத்தை மேம்பாடு காணச் செய்வதில் வெற்றி பெற உங்கள் சார்பாக நாங்கள், புனித நினைவாலயங்களில், அடிக்கடி பிரார்த்திப்போம்.

உருபெரும் காலத்தின் (Formative Age) முதல் நூற்றாண்டு நிறைவடைய இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. அது சமயத்தின் வீரத்துவகாலத்தில் (Heroic Age) தியாக உணர்வுடன் நிர்மாணிக்கப்பட்ட அடித்தலத்தை வலுப்படுத்தியதோடு விரிவாக்கப்படுத்திய அர்ப்பணமிக்க முயற்சிகளின் நூறு வருடத்தை ஒரு நிறைவுக்குக் கொண்டுவரும். அவ்வேளை, அன்பார்ந்த மாஸ்டர் அவர்கள் தெய்வீகப் பேரொளி எனும் விண்ணுலகில் தமது தந்தையாருடன் சேர்ந்துகொள்ள இவ்வுலக வாழ்வெனும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, அவரது விண்ணேற்றத்தின் நூற்றாண்டு நினைவினை, பஹாய் சமூகம் அனுசரித்திடும். அதற்கடுத்த நாள் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கு, “பாலஸ்தீன நிலம் அதுவரை கண்டிராத” ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. அதன் முடிவில், அவரது பூதவுடல் பாப் பெருமானாரின் நினைவாலயத்தின் ஒரு கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே எனவும் பொருத்தமான நேரத்தில் அப்துல்-பஹாவின் தனித்தன்மையான ஸ்தானத்திற்கு ஏற்றதொரு பண்பியலோடு, ஒரு நினைவாலயம் எழுப்பப்படுமென ஷோகி எஃபெண்டி தொலைநோக்காகக் கண்டார்.

அந்த நேரம் வந்துவிட்டது. அந்தப் புனித பூதவுடலை என்றும் நிலையாக அரவணைத்துக் கொள்ளவிருக்கும் ஒரு கட்டிடத்தை எழுப்புமாறு பஹாய் உலகம் ஆணையிட்டு அழைக்கப்படுகின்றது. அது, ரித்வான் பூங்காவின் அருகாமையில், திவ்யப் பேரழகரின் பொற்பாதங்கள்பட்டு புனிதமடைந்த நிலத்தில், கட்டப்படவிருக்கின்றது; இதனால், அப்துல்-பஹாவின் நினைவாலயம், அக்காநகர் மற்றும் ஹைஃபாவிலுள்ள புனித நினைவாலயங்களுக்கிடையில் ஒரு பிறை வடிவ தடத்தின் மீது அமைந்திருக்கும். கட்டிடக்கலை திட்டம் தொடர்பான பணி மேம்பாடு கண்டுவருகின்றது. எதிர்வரும் மாதங்களில் கூடுதல் விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படும்.

வரக்கூடிய வருடத்தையும், அது உறுதியளிக்கும் அனைத்தும் குறித்து நாங்கள் சிந்திக்கும்போது, அளவுகடந்த களிப்புணர்வு எங்களுள் அலைமோதுகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் சமாதானத்திற்காக உழைத்து, பஹாவுல்லாவுக்குச் சேவையாற்றுவதில் ஈடுபட்டு வருகின்ற ஒவ்வொருவரும் உங்கள் மேலான கடமையை நிறைவேற்றுவீரென நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம்.

 

Windows / Mac