The Universal House of Justice
Ridván 2026
To the Bahá’ís of the World
Dearly loved Friends,
இப்ேபாது ஒன்பதாண்டுத் திட்டத்தின் இரண்டாவது, மாெபரும் கட்டம் ெதாடங்குகிறது. உலகளாவிய பஹாய் சமூகம், அது வகுத்த பாைதயில் நியாயமான நம்பிக்ைகயுடன், ஒருமித்து முன்ேனறுவைத நாம் காண்கிேறாம். அதன் ெதளிவும் உறுதியும் சந்ேதகத்திற்கு இடமற்றைவ. உலகின் ெபருகிவரும் ெகாந்தளிப்ைபக் கண்டு அஞ்சாமல், அது தனது புனித பணியில் கவனத்ைதச் ெசலுத்துகிறது. குறிப்பாக, நீண்டகாலமாக சமயத்தில் உறுதியுடன் இருப்ேபாேராடு இைணந்து, புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட நம்பிக்ைகயாளர்கள் ேசைவ மற்றும் ெசயல்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் தங்கள் இடத்ைதப் ெபறுவைதக் கண்டு நாங்கள் மகிழ்கிேறாம். மூன்றாம் ைமல்கல் கிளஸ்டர்கள் வளமான அனுபவங்கைள அறுவைட ெசய்வதற்கும் அவற்ைறப்
பரப்புவதற்கும் ஏதுவான ஸ்தலங்களாகத் திகழ்கின்றன. ேமலும், கடந்த டிசம்பர் மாதம் இங்குக் கூடியிருந்த ஆேலாசகர்களுக்கு நாங்கள் அனுப்பிய ெசய்திைய எங்குமுள்ள நண்பர்கள் பிரதிபலிப்ைபைதயும், அவர்கள் திட்டமிடும்ேபாதும் ெசயல்படும்ேபாதும் அதன் உள்ளடக்கங்கைளப் பயன்படுத்துவைதயும் கண்டு நாங்கள் மகிழ்ச்சியைடகிேறாம்.
உலெகங்கிலும் கூட்டப்பட்ட ஸ்தாபனக் கூட்டங்களில் இந்த ேநாக்கமுள்ள உணர்வு
குறிப்பாகத் ெதன்படுகிறது. மீண்டும் மீண்டும், இக்கூட்டங்கள் குறித்த அறிக்ைககள் ஒேர அற்புத நிகழ்ைவேய சுட்டிக்காட்டுகின்றன: அதாவது, ஊகங்கள் அல்லது ேகாட்பாடுகளின் அடிப்பைடயில் அல்லாமல், துடிப்பான சமூகங்கைளக் கட்டிெயழுப்புவதில் ெபற்ற ேநரடி அனுபவத்தின் அடிப்பைடயிலான ஆழமான, நுண்ணறிவுமிக்க உைரயாடல்கள் நிகழ்வைதேய அைவ
ெதரிவிக்கின்றன. ஒவ்ேவார் இடத்திலும் ெதாடர்ச்சியாக நைடெபற்று வரும் கற்றல் ெசயல்முைறயினால் இந்த உைரயாடல் உயிேராட்டம் ெபறுகிறது. இது பஹாய் சமூகத்தின் முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்த ஆழமான அங்கீகாரத்ைதக் ெகாண்டுள்ளேதாடு, வழிகாட்டுதலுக்காக ஏங்கிக் ெகாண்டிருக்கும், துயரம் நிைறந்த உலகிற்கு இம்முயற்சிகள் தாக்கங்கைளயும் ெகாண்டுள்ளன. ஒரு ெபாறுப்புணர்வும் உறுதியும் பரவலாக உணரப்படுகிறது. ேமலும், ைகவசமுள்ள பணியின் அளவு குறித்த கூர்ைமயான விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. ெபரும்பாலும், இந்த உைரயாடல் ஒரு கூடுதல் மற்றும் ஒன்று மற்ெறான்ைற நிைறவு ெசய்யும் கண்ேணாட்டத்ைதத் திறக்கிறது; இது சமூகம் மற்றும் தனிநபர்களின் முயற்சிகைள ெவறும் திட்டங்கள் மற்றும் பணிகளின் ெதாடர்ச்சியாக மட்டும் பார்க்காமல், இைற ேபாதைனகளின் அடிப்பைடயில் அைமந்த ஒரு வாழ்க்ைக முைறைய வளர்த்ெதடுப்பதாக—அதாவது ெசயல்கள், இைடவிைனகள் மற்றும் ேபரார்வத்ைத வடிவைமப்பதாகக் கருதுகிறது.
கற்றலில் ெகாண்டுள்ள அர்ப்பணிப்ைபப் பிரதிபலிக்கும் இேத ேபான்ற ெமய்யார்வமிக்க
உைரயாடல், ேதசிய மற்றும் மண்டல நிைலகள் ெதாடங்கி கிராமங்கள் மற்றும் அண்ைடப்புறங்கள் வைர, சமூகத்தின் அைனத்து நிைலகளிலும் முன்ெனடுத்துச் ெசல்லப்படுகிறது. இது ஸ்தாபனங்களால் ஏற்பாடு ெசய்யப்பட்ட கூட்டங்கள் மற்றும் புதிதாக உருவாகிவரும் பிற இடங்கெளன பல்ேவறு சூழல்களில் நைடெபறுகிறது. இது நிச்சயமாக ேதசிய ேபராளர் மாநாடுகளிலும் ஒரு சிறப்பம்சமாக இருக்கும். இந்த உைரயாடல் விரிவைடயும் ேபாது, தனிநபர் மற்றும் கூட்டுச் ெசயல்பாடுகளின் முைறகள் வலுப்படுத்தப்படுவைதயும் விரிவுபடுத்தப்படுவைதயும் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிேறாம். வழக்கம்ேபால, இந்த உைரயாடலானது ேமன்ேமலும் விரிவைடயும் நண்பர்கள், அண்ைட வீட்டார் மற்றும் மனிதகுலத்தின் ஒருைமப்பாட்டின் அடிப்பைடயில் ஆன்மீக மற்றும் ெலௗகீக முன்ேனற்றத்ைதக் ெகாண்டுவரும் முயற்சிகளுடன் தங்கைள இைணத்துக்ெகாள்ளும் ஒேர கருத்துைடய பிற ஆன்மாக்களுக்கும் விரிவுபடுத்தப்பட ேவண்டும். இந்த உைரயாடைல விரிவுபடுத்துவதற்காக உருவாக்கப்படும் இடங்கள்—அைவ தன்னிச்ைசயானதாக இருந்தாலும் சரி அல்லது நீண்ட காலத்திற்கு முன்ேப
திட்டமிடப்பட்டைவயாக இருந்தாலும் சரி—சமுதாயத்துடனான ஈடுபாடு ஆழமைடந்து வருவதற்கான ஓர் அறிகுறியாகும்; இைவ ேமலும் ேமலும் ெபாதுவானைவயாக ஆகிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிேறாம்.
பஹாய்களின் அடித்தட்டளவிலான ெசயல்பாடுகைளக் காணும் ெவளி சமூகத்திலுள்ள
பலர், அதன் தனித்துவமான பண்புகளால் ஈர்க்கப்படுகிறார்கள்: இது அைனவரின் நலன் மீதான உண்ைமயான அக்கைறயிலிருந்து பிறக்கிறது, ஒற்றுைம மற்றும் ேசைவைய ேநாக்கமாகக் ெகாண்டது. ேமலும், இது ெதளிவான ெகாள்ைககைளப் பின்பற்றினாலும் ஒவ்ெவாரு பிரச்ைனக்கும் உடனடி தீர்ைவ ைவத்திருப்பதாகத் தற்ெபருைம ெகாள்வதில்ைல. ெபாதுவான முயற்சிெயனும் உணர்ேவாடு, பஹாய்கள் மற்றவர்களுடன் இைணந்து ெசயல்படவும், ஒன்றாகக் கற்றுக்ெகாள்ளவும் நாடுகின்றனர்; ேமலும், சமூகத்தில் அதிகாரம் மற்றும் ெபாறுப்பான பதவிகளில் இருப்ேபாருடன் அவர்கள் ஏற்படுத்தும் உறவில், அவர்கள் ஊக்கத்துடனும் ெதளிவான ெதாைலேநாக்குப் பார்ைவயுடனும் இருக்கின்றனர். அவர்கள் அரசியல் ஆைசகேளா சுயநலேமா இன்றி சமூக மாற்றத்ைதப் பின்ெதாடர்கின்றனர்; ேமலும், சமயத்தின் ேமன்ைம உயரும்ேபாது, அதன் உண்ைமத் தன்ைமயும் ேநாக்கமும் நன்கு புரிந்து ெகாள்ளப்படுவைத உறுதிெசய்வது முக்கியம் என்பைதயும் அவர்கள் அங்கீகரிக்கின்றனர். பல இடங்களில், சமூதாயத்துடனான சமூகத்தின் ஆழமான ெதாடர்புகள் என்பது, தவிர்க்க முடியாமல், வழிநடத்த ேவண்டிய புதிய சூழ்நிைலகளும், விைடயளிக்க ேவண்டிய புதிய ேகள்விகளும் உள்ளன என்பைதேய குறிக்கிறது; இது சமூகத்ைதத் தனது ெசாந்த திறன்கைள ேமலும் ேமம்படுத்திக்ெகாள்ள கட்டாயப்படுத்துகிறது. சமீபத்தில் நைடெபற்ற ஆேலாசகர்கள் மாநாட்டிற்கு நாங்கள் அனுப்பிய ெசய்தியில்
விளக்கியது ேபால, கடந்த நான்கு ஆண்டில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது; அதாவது இத்திட்டத்தின் ஒரு முக்கிய முன்ெனடுப்பாளராக (protagonist) இச்சமூகம் உருெவடுத்துள்ளது. இது குறிப்பிட்ட ேதைவகைளப் பூர்த்தி ெசய்யவும், குறிப்பிட்ட முயற்சி துைறகைள முன்ேனற்றவும், கூட்டு ஏற்பாடுகள் மூலம் பரஸ்பர ஆதரைவ வழங்கவும், உருவாகி வரும் ெசயல்பாட்டு கட்டைமப்பிற்குள் (framework for action) ெபருகிய முைறயில் திறம்பட ெசயல்படக் கற்றுக்ெகாள்ளவும் சமூகம் தன்ைனத்தாேன ஒழுங்கைமத்துக் ெகாள்கிறது. இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், இைளஞர் குழுக்கள் ஓர் உள்ளூரில் இைணந்து பணியாற்றுவதும், தங்கள் சமவயதினரின் பங்களிப்ைப ஊக்குவிப்பதுமாகும். இயல்பாகேவ, இவர்களது முயற்சிகள் ஸ்தாபனங்களின் அன்பான ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலால் ெபருமளவில் பயனைடகின்றன; அேத ேவைளயில், தாங்களாகேவ முன்முயற்சிகைள எடுக்கவும், பலனளிக்கக்கூடிய ேசைவ பாைதகைளக் கண்டறியவும் தங்களுக்குள்ள திறைன இந்த இைளஞர்கள்
ெவளிப்படுத்தியுள்ளனர். ெபரும்பாலும், இவர்களது முயற்சிகள் ேமாதல், ஒழுங்கற்ற நிைல, ெபாருளாதார சமத்துவமின்ைம மற்றும் ஆழமான சமூகப் பிளவுகள் ஆகிய பின்னணிகளுக்கு மத்தியிேலேய நைடெபறுகின்றன. இத்தைகய சூழல்களில் இைளஞர்கள் எதிர்ெகாள்ளும் சவால்கைள நாங்கள் அறிகின்ேறாம்; ேமலும், விமர்சிப்பதற்கும் கண்டனம் ெசய்வதற்கும் தூண்டும் உணர்வுகைள எதிர்த்து நின்று, அதற்குப் பதிலாக இத்தைகய மிகப்ெபரிய தைடகைளத் தவிர்த்துச் ெசல்வதற்கும், இறுதியில் அவற்ைற முறியடிப்பதற்கும் ஆக்கபூர்வமான வழிகைளக் கண்டறிந்து ெசயல்படும் அவர்கைள நாங்கள் பாராட்டுகிேறாம்.
அன்பிற்குரிய நண்பர்கேள, காலம் எத்துைணக் ெகாந்தளிப்பாக இருந்தாலும், நீங்கள்
அச்சமைடயேவா மனச்ேசார்வைடயேவா ேவண்டாெமன்று நாங்கள் உங்கைள
வலியுறுத்துகிேறாம். இைறவனின் அருட்ெகாைடகைளச் சார்ந்திருக்குமாறும், அதன் மூலம் "எப்ேபாதும் நம்பிக்ைகயுடனும்", நமது நம்பிக்ைகயில் "உறுதியுடனும்", மற்றும் "நம்பிக்ைகயிழந்த ஆன்மாக்களுக்கு நம்பிக்ைகையத் தருேவாராகவும்" இருக்குமாறு அப்துல்-பஹா நம் அைனவருக்கும் அறிவுறுத்துகிறார். உலகின் அடிவானம் இருளும்ேபாது, நம்பிக்ைகெயன்பது அரிதான மற்றும் விைலமதிப்பற்ற ஒன்றாகிறது—ஆனால், மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த உறுதிப்பாட்டினாலும், தனது ெசாந்த அனுபவத்திலிருந்து கற்றுக்ெகாண்டவற்றாலும் அதிெபரும் நாமத்தின் சமூகம் அந்த நம்பிக்ைகயினால் ெசழுைமயாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவர்களின் இதயங்களுக்குக் ெகாண்டு வரக்கூடிய அந்த நம்பிக்ைகக்காகப் ெபருந்திரளான மக்கள் ஏங்கிக் ெகாண்டிருக்கிறார்கள்.
நம்பிக்ைகெயனும் சுடைர நீண்டகாலமாகப் பாதுகாத்து வரும் ஒரு ெபான்னான
உதாரணத்திற்கு, அவரது சமயத்தின் பிறப்பிடத்தில் வாழும் பஹாவுல்லாவின்
நம்பிக்ைகயாளர்கைள நாம் பார்க்கிேறாம்; அவர்கள் அநீதி இைழக்கப்பட்ட ேபாதிலும், எப்ேபாதும் ெபாறுைமயுடனும், எப்ேபாதும் உறுதியுடனும், எதைனயும் தாங்கும் மனவலிைமயுடனும் திகழ்கின்றனர். பல தசாப்தங்களாகத் ெதாடரும் இைடவிடா ஒடுக்குமுைறகளுக்கு மத்தியிலும் அவர்கள் எத்துைண ஒழுக்கத்துடன் இருக்கிறார்கள், ெகாள்ைககளின் மீது எத்துைண உறுதியாக இருக்கிறார்கள் என்பைதப் பாருங்கள்—ேமலும், பிற நாடுகளிலுள்ள சக நம்பிக்ைகயாளர்கள் அைடந்துள்ள முன்ேனற்றங்களிலிருந்து கற்றுக்ெகாள்வதில் அவர்கள் எத்துைண உறுதியுடனும், தங்கள் ெசாந்த நாட்டிலுள்ள சக குடிமக்களுக்கு ேசைவ ெசய்யவும் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் எத்துைண மனவுறுதியுடனும் இருக்கிறார்கள் என்பைதக் கவனியுங்கள். தங்கள் நாட்டு மக்கள் பலருக்கு அவர்கள் ஒரு நம்பிக்ைகயின் கலங்கைர விளக்கமாகவும், கருைண மற்றும் நுண்ணறிவின் ஊற்றாகவும், ேசைவ பாைதயில் நம்பிக்ைகக்குரிய ேதாழர்களாகவும் இருந்து வருகின்றனர், இப்ேபாதும் அவ்வாேற ெதாடர்கின்றனர். சமீபத்திய வாரங்களிலும் மாதங்களிலும், நாம் மிகவும் ேநசிக்கும் இந்த நண்பர்கள் எங்களது எண்ணங்களில் நீங்காது இடம்ெபற்றுள்ளனர்; எங்களது பிரார்த்தைனகளிலும் அவர்கள் ெதாடர்ந்து நிைனவுகூர்ந்திடப் படுகிறார்கள். நீங்களும் அவ்வாேற ெசய்வீர்கெளன்று நாங்கள் உறுதியாக நம்புகிேறாம். என்றும் அன்புைடய இைறவன் அவர்கைளத் தனது கனிவான அரவைணப்பில் ைவத்துப் பாதுகாக்குமாறு நாங்கள் ேவண்டுகிேறாம்.
இைற சமயத்ைத முன்ெனடுத்துச் ெசல்வதற்காக நீங்கள் ேமற்ெகாள்ளும் முயற்சிகளும்
எங்களது பிரார்த்தைனகளில் குைறயா இடத்ைதப் பிடித்துள்ளன—குறிப்பாக இப்ேபாது, ஒன்பது ஆண்டுத் திட்டத்தின் புதிய கட்டம் ெதாடங்கும் இவ்ேவைளயில், புனித சன்னிதானத்தில் நாங்கள் சமர்ப்பிக்கும் ேவண்டுதல்களில் நீங்கள் இடம்ெபறுகிறீர்கள். நாங்கள் புனித ஸ்தலங்களுக்கு ெசல்லும் ேபாெதல்லாம், உங்கள் முயற்சிகளுக்காக இைறவனின் துைணையயும் உதவிையயும் ேவண்டுகிேறாம். ேமலும், உங்கள் பணிகளில் உங்களுக்கு மனவலிைமையயும் ஆற்றைலயும் வழங்குமாறு இைறஞ்சுகிேறாம். நீங்கள் ெசயல்படுவதில் விைரவாகவும், கற்றுக்ெகாள்வதில் ஆர்வமாகவும் இருப்பீர்களாக; விண்ணுலக இராஜ்யத்தின் அைனத்து ஆசீர்வாதங்களும் உங்களுைடயதாகட்டும்.
- The Universal House of Justice