Return   Facebook

The Universal House of Justice

Ridván 2023

To the Bahá’ís of the World

Dearly loved Friends,

அதன் உயர்வான பணிக்குப் பொருத்தமான உயர்ந்த மனப்பான்மையும், உயர்ந்த மன உறுதியும் கொண்ட ஒரு சமூகத்திற்கு இச்செய்தியை அனுப்புவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். உங்கள்பாலான எங்களின் அன்புதான் எத்துணை அதிகம், பஹாவுல்லாவின் போதனைகளால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கும், அவரது திருவெளிப்பாட்டின் உயிரூட்டும் நீரை கடும் தாகத்திலிருக்கும் ஓர் உலகத்திற்கு வழங்குவதற்கும் உங்கள் நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள முயற்சியைக் கண்ணுறும்போது எங்கள் உணர்வுகள் வானளாவ உயர்கின்றன. உங்களின் உறுதியான நோக்க உணர்வு தெளிவாகத் தெரிகிறது. விஸ்தரிப்பு மற்றும் வலுப்படுத்தல், சமுதாய நடவடிக்கை, சமுதாய சொல்லாடல்களில் பங்கேற்றல், ஆகியவை ஒன்றாகத் தொடர்கின்றன, கிளஸ்டர் மட்டத்தில் இந்த நடவடிக்கைகளின் இயல்பான ஒத்திசைவு மேன்மேலும் தெளிவாகி வருகின்றது. ஒவ்வொன்றும் சமயத்தின் சமூக நிர்மாணிப்புச் சக்தியை விடுவிப்பதற்கான ஒரு வழிமுறையாக இருக்கின்ற வரிசையான முயற்சிகளில், அதிகரித்துவரும் எண்ணிக்கையினர் ஈடுபடும் இடங்களில் இது தெளிவாகி வருகின்றது.

ஒன்பதாண்டுத் திட்டம் ஆரம்பித்து பன்னிரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த உலகளாவிய ஆன்மீக பெருமுயற்சி எவ்வாறு நண்பர்களுக்கு உத்வேகமளித்து செயல்படத் தூண்டுவதுடன் குறிப்பிட்ட செயல் வரிசைகளுக்கு உந்துசக்தியும் அளித்துள்ளது என்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு நாட்டிலும் மண்டலத்திலும் மூன்றாவது மைல்கல்லைத் தாண்டியுள்ள, குறைந்த பட்சம் ஒரு கிளஸ்டராவது வெளிப்படுவதை உறுதிபடுத்திடும் திட்டங்களைச் செயல்படுத்துவது உடனடி கவனத்திற்குரியதாகும்: பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்றாகச் செயல்பட்டு, ஒரு துடிப்பான சமூகத்தின் வாழ்விற்கு பங்களிக்கும் ஒரிடம். எவ்வாறெனினும், இந்த இருபத்தைந்து ஆண்டு காலப்பகுதியின் குறிக்கோள் உலகின் ஒவ்வொரு கிளஸ்டரிலும் ஒரு தீவிர வளர்ச்சித் திட்டத்தை ஸ்தாபிப்பதாகும் என்பதை உணர்ந்த நம்பிக்கையாளர்கள், சமயத்திற்குப் புதிய கிளஸ்டர்களைத் திறக்கவும், ஏற்கனவே இருக்கும் வளர்ச்சித் திட்டத்தைக் கொண்ட இடங்களில் தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும் முனைந்துள்ளனர். உலகின் எல்லா பாகங்களிலும் முன்னோடிப் பணிக்கு முன்னெழுவதற்கான வாய்ப்பு குறித்து அதிகரித்துள்ள விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பல அர்ப்பணமிக்க ஆன்மாக்கள் இந்த வாய்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பரிசீலித்து வருகின்றனர். மேலும் பலர், குறிப்பாக உள்நாட்டில், கவனிக்கப்படும்படி தங்களுக்கான இடங்களை எற்கனவே நிரப்பியுள்ளனர், ஆனால் அதிகரித்திடும் அளவில் அனைத்துலக அரங்கில் தங்கள் பணியிடங்களில் அமர்ந்துள்ளனர். நாங்கள் எதிர்ப்பார்த்தது போன்றே, எங்கிலும் உள்ள நண்பர்கள் வெளிப்படுத்தும் பரஸ்பர ஆதரவுக்கான ஓர் உணர்வு வெளிப்படுத்தப்படும் பல வழிகளில் இதுவும் ஒன்றாகும். வேறு ஓர் இடத்தில்—ஒரு கிளஸ்டர், மண்டலம், நாடு அல்லது கண்டம்—உருவாகும் முன்னேற்றத்திற்கு ஆதரவு நல்குவதில் வலிமை பெற்றுள்ள சமூகங்கள் தங்களை அர்ப்பணித்துள்ளதுடன், தூரத்திலிருந்து ஊக்குவிப்பு வழங்கிடவும் அனுபவம் நேரடியாகப் பகிர்ந்துகொள்வதற்கு உதவிடவும் ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் காணப்பட்டுள்ளன. இதற்கிடையில், உள்ளூரிலும் பிற இடங்களிலும் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு அறிவூட்டுவதற்கு ஏதுவாக, ஒரு கிளஸ்டரில் என்ன கற்கப்பட்டுள்ளது என்பதைக் தொகுக்கும் அடிப்படை அணுகுமுறை பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. பயிற்சிக்கழகத்தினால் வழங்கப்படும் கல்வியல் அனுபவத்தின் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வதற்கு குறிப்பான கவனம் செலுத்தப்படுவதைக் கண்டு நாங்கள் மனநிறைவு அடைந்துள்ளோம். ஒரு சமூகத்தில் பயிற்சி செயல்முறை வேரூன்றிடும் போது, அதன் பயன்விளைவுகள் வியப்பூட்டுபவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, பயிற்சிக்கழகத்தைத் தங்களுடைய ஒரு சக்திமிக்கக் கருவியாகவும் அதன் உறுதியான மேம்பாட்டிற்கு தாங்களே முதன்மைப் பொறுப்பாளர்கள் எனவும் கருதுகின்ற குடியிருப்பாளர்களைக் கொண்ட தீவிர நடவடிக்கை மையங்களைப் பாருங்கள். சமயத்தின் கதவுகள் எப்போதும் அகலத்திறந்துள்ளன என்பதை நன்கறிந்த நம்பிக்கையாளர்கள் அதில் பிரவேசிக்கத் தயாராக இருப்போருக்கு எவ்வாறு ஊக்குவிப்பு வழங்குவது என்பதைக் கற்றுவருகின்றனர். அத்தகைய ஆன்மாக்களுடன் நடந்து செல்வதும், அந்த வாயிற்கதவிற்குள் நுழைய அவர்களுக்கு உதவுவதும் ஒரு சலுகையும் விசேஷ மகிழ்ச்சியுமாகும்; ஒவ்வொரு கலாச்சார சூழலிலும், இந்த அங்கீகாரம் மற்றும் சொந்தமாதல் குறித்த முக்கிய தருணத்தின் இயலாற்றல்களைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு நிறையவே உள்ளது. அது மட்டுமன்று. பல கிளஸ்டர்களில் சமுதாய தன்மைமாற்றத்திற்குப் பங்களிக்கும் முயற்சிகள் அவற்றின் ஆரம்பக் கட்டங்களில் இருக்கும் அதே வேளை, ஆலோசகர்களால் தொடர்ந்து திறம்பட ஆதரிக்கப்படும் தேசிய ஆன்மீக சபைகள், சமூக நிர்மாணிப்புச் செயல்முறையில் இருந்து இம்முயற்சிகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதைத் தீவிரமாகக் கற்றுக்கொள்ள முயல்கின்றன. ஒரு மக்களின் சமுதாய மற்றும் லௌகீக நல்வாழ்வு பற்றிய கலந்துரையாடல்கள் குடும்பக் குழுக்களுக்குள் மற்றும் சமூகங்களில் பேணப்பட்டு வருகின்றன. அதே வேளை தங்களின் சுற்றுப்புறங்களில் வெளிப்பட்டு வரும் அர்த்தமுள்ள சொல்லாடல்களில் பங்கேற்பதற்கான வழிகளை நண்பர்கள் கண்டுவருகின்றனர்.

நாம் விவரித்த எல்லாவற்றிற்கும் மத்தியில், இளைஞர்களின் செயல்கள் ஒளிர்வுடன் பிரகாசிக்கின்றன. (வெளித்)தாக்கத்தின் உணர்ச்சியற்ற ஏற்போர்களாக இருப்பதற்குப் பதிலாக—அத்தாக்கம் தீங்கற்றதாக இருந்தாலும் அல்லது வேறுவிதமாக இருந்தாலும்—அவர்கள் தங்களை திட்டத்தின் தைரியமான மற்றும் பகுத்தறியும் முன்னணியாளர் என்பதை நிரூபித்துள்ளனர். ஒரு சமூகம் அவர்களை இந்த அடிப்படையில் கண்ணுற்றிருந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கான சூழ்நிலைகளை உருவாக்கியிருப்பின், தங்கள் மீது காட்டப்பட்ட நம்பிக்கையை அதிகமாகவே இளைஞர்கள் நியாயப்படுத்தியுள்ளனர். அவர்கள் தங்கள் நண்பர்களுக்குச் சமயத்தைக் கற்பிக்கின்றனர்; சேவையை அதிக அர்த்தமுள்ள நட்பின் அடித்தளமாக்குகின்றனர். பெரும்பாலும், அத்தகைய சேவை தங்களை விட இளையவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கான வடிவத்தை எடுக்கின்றது—அவர்களுக்குத் தார்மீக மற்றும் ஆன்மீகக் கல்வியை வழங்குவது மட்டுமன்றி, பெரும்பாலும் அவர்களின் பள்ளிப்படிப்பிற்கும் உதவுகிறது. பயிற்சி செயல்முறையை வலுப்படுத்துவதற்கான புனிதக் கடமையைக் கொண்டுள்ள பஹாய் இளைஞர்கள் எங்கள் பிரியத்திற்குரிய நம்பிக்கைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

மிகவும் ஆழமாக நிலைகுலைவுக்கு ஆளாகியுள்ள இக்காலக்கட்டமே இம்முயற்சிகள் அனைத்திற்குமான தளமாகும். மானிடத்தின் தற்போதைய பிரச்சினைகளில் அதன் தேவைகளை ஈடு செய்வதில் சமுதாயத்தின் இக்கால கட்டமைப்புகள் தயாராகவே இல்லை என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உறுதியான மற்றும் அசைக்க முடியாதவை என பரவலாகக் கருதப்பட்ட பல விஷயங்கள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன, இதன் விளைவாக ஏற்படும் பொங்கெழுச்சி (ferment) ஓர் ஒன்றுபடுத்தும் தொலைநோக்கிற்கான ஏக்கத்தை உருவாக்குகிறது. ஒருமை, சமத்துவம், நீதி ஆகியவற்றுக்கு ஆதரவாக எழுப்பப்படும் குரலொலிகள் எத்தனை பேர் இந்த இலட்சியங்களைத் தங்கள் சமுதாயங்களில் பகிர்ந்துகொள்கின்றனர் என்பதைக் காட்டுகின்றது. நிச்சயமாகவே, திவ்ய பேரழகர் முன்வைத்த ஆன்மீக இலட்சியங்களுக்கான இதயங்களின் ஏக்கம் திவ்ய பேரழகின் நம்பிக்கையாளர் ஒருவருக்கு ஆச்சரியமளிப்பதல்ல. ஆயினும்கூட, மனிதகுலத்தின் கூட்டு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருண்டதாகத் தோன்றிய ஓர் ஆண்டில், கிட்டத்தட்ட ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாநாடுகளில், அதே இலட்சியங்களை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகளில் கவனம் செலுத்திய சமயத்தின் ஒளி வியக்கத்தக்க ஒளிர்வுடன் பிரகாசித்ததை நாம் கண்டோம். பஹாவுல்லாவின் தொலைநோக்கும், உலக முன்னேற்றத்திற்காக மனிதகுலம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்னும் அவரது அறிவுரையும், சமூகத்தின் பல்வேறு மக்கள் ஆர்வத்துடன் ஒன்றுகூடிய மையமாக இருந்தன—மேலும், அப்துல் பஹா விளக்கியதைப் போல, "உலகில் உள்ள ஒவ்வொரு சமூகமும் அதன் உயர்ந்த குறிக்கோள்களின் நிறைவேற்றத்தை இந்தத் தெய்வீகப் போதனைகளில் காண்கிறது.” மனிதகுலத்தின் நலன்விரும்பிகள் சிலர் முதலில் பஹாய் சமூகத்தை அடைக்கலத்திற்கான ஓர் இடமாக, பிரிவுக்கு ஆளாகிய மற்றும் ஸ்தம்பித்துள்ள ஓர் உலகத்திற்கான புகலிடம் என்னும் முறையில் அதன்பால் ஈர்க்கப்படலாம். இருப்பினும், புகலிடம் என்பதற்கும் அப்பால், உலகைப் புதிதாகக் கட்டமைக்க ஒன்றிணைந்து பாடுபடும் சகோதர ஆன்மாக்களைத்தான் அவர்கள் அங்கு காண்கின்றனர்.

மாநாடுகளின் புவியியல் பரவல், புதிய திட்டத்திற்கு அவை அளித்த அசாதாரண உந்துசக்தி, அல்லது கலந்து கொண்டவர்களுள் அவை ஏற்படுத்திய மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் இதயப்பூர்வமான வெளிப்பாடுகள் பற்றி நிறையவே எழுதலாம். ஆனால், இச்சில வரிகளில் சமயத்தின் அபிவிருத்தி குறித்து அவை குறித்துக் காட்டியதன்பால் கவனத்தை ஈர்த்திட விரும்புகின்றோம். அவை, வேறுபாட்டைக் காணாமல் உறவுமுறையைக் காண்கின்ற ஒரு பஹாய் சமூகத்தின் பிரதிபலிப்பாகும். இந்தக் கண்ணோட்டமானது, அனைவரும் வரவேற்கப்பட்ட ஒன்றுகூடல்களில் ஒன்பது ஆண்டுத் திட்டத்தை ஆராய்வதை இயல்பான ஒன்றாக ஆக்கியது. நண்பர்கள், தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் மட்டுமன்றி, உள்ளூர்த் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளான பிரமுகர்களுடன் தங்கள் சமூகங்களுக்கான இந்தத் திட்டத்தின் தாக்கங்களை நண்பர்கள் பரிசீலித்தனர். பல மக்களை ஒரே இடத்தில் ஒன்றுதிரட்டியது, உலகம் முழுவதும் மடிப்பவிழ்ந்து வரும் ஒன்றான, ஆன்மீக மற்றும் சமுதாய மேம்பாடு குறித்த தன்மைமாற்றும் உரையாடல்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்கியது. ஒரே நேரத்தில் திறந்த, மேம்பட்ட மற்றும் நோக்கம் நிறைந்த அத்தகைய கூட்டங்கள், ஒரு கிளஸ்டரில் சமூக மேம்பாட்டின் விரிவடையும் மாதிரிபடிவத்திற்குச் செய்யக்கூடிய சிறப்பு பங்களிப்பு, பஹாய் ஸ்தாபனங்கள் எதிர்காலத்திற்காக மனதில் கொள்ள வேண்டிய ஒரு மதிப்புமிக்க பாடமாகும்.

எனவே, நம்பிக்கையாளர் கூட்டம் ஒரு புதிய கண்ணோட்டத்துடனும், அவர்கள் சாதிக்க விரும்பும் விஷயங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுடனும் திட்டத்தின் இரண்டாவது ஆண்டில் பிரவேசிக்கின்றனர். செயல்பாடுகள் விடுவிக்கும் சமூக நிர்மாணிப்புச் சக்தியின் ஒளியில் பார்க்கும்போது அச்செயல்பாடுகள் எவ்வளவு வித்தியாசமாகத் தோன்றுகின்றன! இந்தப் பரந்த வாய்ப்பானது, ஒரு நிலைநிறுத்தக்கூடிய செயல்பாட்டை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சேவை செயல் அல்லது ஒரு தரவு புள்ளிக்கும் மேம்பட்ட ஒன்றாகக் கண்ணுற அனுமதிக்கின்றது. ஒவ்வோர் இடத்திலும், பின்பற்றப்படும் முன்முயற்சிகளானவை, தனது சொந்த வளர்ச்சிக்கான பாதையில் செல்வதற்கு, அதிகரித்திடும் பொறுப்பை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளும் ஒரு மக்கள்தொகையை வெளிப்படுத்துகின்றது. அதன் விளைவான, ஆன்மீக மற்றும் சமுதாய தன்மைமாற்றமானது பல்வேறு வழிகளில் ஒரு மக்களின் வாழ்க்கையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்றது. முந்தைய திட்டத் தொடர்களில், ஆன்மீகக் கல்வி மற்றும் கூட்டு வழிப்பாட்டை ஊக்குவிப்பதில் இது மிகவும் தெளிவாகக் காணப்பட்டது. இந்தப் புதிய தொடர் திட்ட வரிசைகளில், ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்த முயலும் பிற செயல்முறைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்—உதாரணத்திற்கு, பொது சுகாதாரத்தை மேம்படுத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், அல்லது கலைகளின் சக்தியிலிருந்து மிகவும் விளைவுத்திறத்துடன் பயனடைதல் ஆகியனவாகும். நிச்சயமாகவே, ஒரு சமூகத்தின் நல்வாழ்வின் இந்த நிரப்பம் செய்யும் அம்சங்கள் அனைத்தும் மேம்பாடு காண்பதற்கு இந்த எல்லா துறைகளிலும் முறைமையான கற்றலில் ஈடுபடுவதற்கான திறனாற்றல் தேவை--இது போதனைகளிலிருந்து எழும் நுண்ணறிவுகளையும் அறிவியல் விசாரணையின் மூலம் உருவாக்கப்பட்ட மனித அறிவுக் களஞ்சியத்தின் சேமிப்பையும் பயன்படுத்தும் திறனாற்றல் ஆகும். இந்தத் திறனாற்றல் வளர்ச்சியுறும் போது, வரும் தசாப்தங்களில் அதிகமாக சாதிக்கப்படும்

இந்த விரிவாக்கப்பட்ட சமுதாய நிர்மாணிப்பு தொலைநோக்கு நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சமூகமும் அதனை அடைவதற்கான தனது சொந்தப் பாதையில் பயணிக்கின்றது. ஆனால் ஓரிடத்தில் மேம்பாடு மற்றோர் இடத்தின் மேம்பாட்டுடன் ஒப்பிடும் போது, அது பெரும்பாலும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கும். அத்தகைய ஓர் அம்சம் யாதெனில், திறனாற்றல் அதிகரிக்கும்போதும் ஓர் உள்ளூர் அல்லது தேசிய சமூகத்தின் சக்திகள் பன்மடங்காகும்போதும், காலம் கனிந்திடும் போது, எங்கள் ரித்வான் 2012 செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள, ஒரு மாஷ்ரிகுல்-அஸ்கார் உருவாவதற்குத் தேவையான நிபந்தனைகள் இறுதியில் பூர்த்தி செய்யப்படும். கடந்த ரித்வானில் உங்களுக்கு அனுப்பிய செய்தியில் நாங்கள் சுட்டிக்காட்டியபடி, ஒரு பஹாய் கோயில் எழுப்பப்பட வேண்டிய இடங்களை நாங்கள் அவ்வப்போது அடையாளம் காண்போம். இந்த நேரத்தில், நேப்பாளத்தின் காஞ்சன்பூர் மற்றும் ஜாம்பியாவின் ம்வினிலுங்காவில் உள்ளூர் வழிபாட்டு இல்லங்கள் ஸ்தாபிக்கப்படுவதற்கான அழைப்பை விடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதற்கு அப்பால், கனடாவில், டோரொன்டோவில் நீண்டகாலமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய ஹஸீராத்துல் குட்ஸின் அருகாமையில், ஒரு தேசிய வழிபாட்டு இல்லம் எழுப்பப்பட வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். இந்தத் திட்டங்களும், எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பிற திட்டங்களும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நண்பர்களால் கோவில் நிதிக்கு வழங்கப்படும் ஆதரவின் மூலம் பயனடையும்.

கருணையுள்ள இறைவன் தமது அன்புக்குரியோர் மீது பொழிவதற்காகத் தேர்ந்தெடுத்த ஆசீர்வாதங்கள் ஏராளமாகும். அழைப்பு உயர்வானது, சாத்தியம் பெருஞ்சிறப்புமிக்கது. நாம் அனைவரும் சேவை செய்ய அழைப்பாணை விடுக்கப்பட்டக் காலங்கள் அவசரமானவை. எனவே, உங்கள் சார்பிலும், உங்கள் அயராத முயற்சிகளுக்குமாக, பஹாவுல்லாவின் தலைவாசலில் நாங்கள் மன்றாடுவதற்குப் பயன்படுத்தும் பிரார்த்தனைகள் உணர்ச்சிகரமானவை

 

Windows / Mac